பிந்திய செய்திகள்

உங்களை பிடித்த பீடை விலக பெயர் சொல்லாத இந்த 1 போதுமே

நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுக்கோப்புடன் இருந்தாலும், நம்மை ஏதோ ஒன்று அப்படி இருக்க விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். எது நம்மளை தடுத்துக் கொண்டிருக்கிறது? என்பதை யோசிப்பதற்குள் பல காலம் போய்விடும். அப்படியே நம்மை தடுக்கும் விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். இத்தகையவர்கள் உங்களிடம் இருக்கும் இந்தப் பீடை விலக என்ன செய்ய வேண்டும்?

தரித்திரம் நம்மை துரத்தும் பொழுது எப்படியாவது அதிலிருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமாக இருக்கும். நம்முடைய மூளை அல்லது அறிவானது சரியான திசையில் நம்மை இயக்க நினைத்தாலும், திசை திருப்பி விட்டாலும் நம் மனமானது அதை ஏற்காமல் தட்டிக் கழித்து விடும்.

உங்கள் மனம் உங்கள் சொல்லை கேட்காத எல்லா சமயங்களும் உங்களுக்கு பீடை பிடித்துள்ளது என்பது தான் அர்த்தம். நம்மிடம் பீடை, தரித்திரம் ஆகியவை இருந்தால் தவறு என்பது தெரிந்தும் அதை நாம் செய்ய துணிவோம். ஒரு சிலருக்கு கொஞ்சம் முயற்சி செய்தால், கட்டுப்பாட்டோடு இருந்தால் அந்தத் தரித்திலிருந்து, அந்த விஷயத்தில் இருந்து மீண்டு வந்து விட முடியும். ஆனால் பலரால் அதிலிருந்து என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டு வர முடியாமல், அதை ஏற்கவும் முடியாமல் மனம் அங்கலாய்க்கும்.

நாட்டு மருந்து கடைகளில் பெயர் சொல்லாத மருந்து என்று கேட்டால் கொடுப்பது வசம்பை தான். வசம்பு என்கிற பெயரை சொல்லி கேட்டால் அந்த பொருளுக்கு சக்தி குறைந்து விடும் என்பது நம்பிக்கை. வசம்பு வேலை செய்வதற்கு அதை பெயர் சொல்லாத மருந்து, பெயர் சொல்லாத மூலிகை என்று தான் குறிப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் அல்லது எதை கண்டோ பயந்து போய் இருந்தாலும், தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாலும் இது போல வசம்பை நெருப்பில் காட்டி எரித்து அதன் மையை எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால், தொப்புள், உச்சந்தலை ஆகிய இடங்களில் எல்லாம் பூசி விடுவார்கள். குழந்தையின் நாவிலும் சிறிது தடவி விடுவார்கள். இது குழந்தைக்கு இருக்கும் தோஷத்தை அகற்றும், மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

இத்தகைய அதிசக்தி வாய்ந்த இந்த வசம்பை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் நீங்கள் கேட்டு வாங்கும் பொழுது இதன் பெயரை உச்சரிக்காமல் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் அப்போது தான் நீங்கள் செய்யும் இந்த பரிகாரத்திற்க்கு பலனும் உண்டு. பின்னர் அதன் மீது கொஞ்சம் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். மனதார உங்கள் பிரச்சனை நிறைவேற வேண்டும் என்றும், நீங்கள் நினைக்கும் காரியம் கைகூட வேண்டும் என்றும், நீங்கள் எந்த விஷயத்தில் இருந்து விலக நினைக்கிறீர்களோ அந்த விஷயம் உடனே நடக்க வேண்டும் என்றும், உங்கள் மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் இறைவனிடம் மனமார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு அந்த வசம்பை எடுத்து உங்கள் ஆடையில் ஏதாவது ஒரு பகுதியில் முடிந்து கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் புடவை முந்தானை அல்லது துப்பட்டாவில் முடிந்து கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் உங்களுடன் இருக்குமாறு கைகுட்டையில் முடிந்து உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். இது உங்களுடன் இருக்கும் வரை உங்களுக்கு கெட்ட எண்ணங்கள் வராமல் தடுக்கப்படும். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால் தான் பலன் அளிக்கும். அதே போல இதையும் நம்பிக்கையுடன் செய்து பயன் பெறலாமே!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts