பிந்திய செய்திகள்

ஆந்தை அலறல் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான பலன்களை அறியலாமா?

சகுனம் பார்க்கும் பழக்கம் உலகின் எல்லா நாடுகளிலும் பல்லாண்டு காலமாகவே இருந்து வந்திருக்கிறது. ஜோதிட கலையின் மேலோட்டமான ஒரு கலையாக இந்த சகுனம் பார்ப்பது இருந்து வந்திருக்கிறது. இதில் விலங்குகள் மற்றும் பறவைகளின் தரிசனம், அவை வெளிப்படுத்தும் சத்தம் ஆகியவற்றை கொண்டு பலன் கூறுவது நமது நாட்டில் தொன்றுதொட்டு இருக்கும் ஒரு கலையாகும். இதில் இருட்டில் பார்க்கும் கண்பார்வை திறன் மற்றும் இரவில் பறக்ககூடிய “ஆந்தை” பறவையின் சத்தத்தை வைத்து கூறப்படும் பலன்கள்

சில நாடோடி கதைகளில் இரவில் பார்வை திறன் கொண்டதோடு, பறக்கவும் முடிகின்ற ஆந்தை பறவையை பேய், பூத, பிசாசுகள் போன்றவற்றோடு தொடர்பு படுத்தி ஒரு துஷ்ட பறவையை சித்தரித்து விட்டனர். இதன் காரணமாக பல இடங்களில் ஆந்தை பறவைகள் காரணமின்றி கொல்லப்பட்டிருக்கின்றன. நமது இந்திய நாட்டை பொறுத்தவரை ஆந்தைக்கு ஆன்மிகம் மற்றும் ஜோதிடக்கலையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்து மத புராணங்களில் படி ஆந்தை செல்வ கடவுளான “லட்சுமி” தேவியின் வாகனம் என கருதப்படுகிறது.

இரவு அல்லது அதிகாலை வேளைகளில் நம் வீட்டு மரத்தில் அமர்ந்தவாறே அல்லது அருகில் வேறெங்காவது இருந்தவாறே ஆந்தை அலறும் போது, அந்த அலறல்களின் எண்ணிக்கை கொண்டும் ஜோதிட பலன் கூறும் வழக்கம் பன்நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அத்தகைய ஆந்தை பறவையின் அலறல்களுக்கான பலன்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஆந்தை அலறல் பலன்கள்

1 முறை அலறினால் – துக்க செய்தி ஏதாவது வருவதை குறிக்கும்.

2 முறை அலறினால் – மகிழ்ச்சியான செய்தி மற்றும் ஈடுபடும் காரியங்களில் வெற்றி.

3 முறை அலறினால் – இன்பங்களை அனுபவித்தல், உல்லாசம்.

4 முறை அலறினால் – சண்டை, சச்சரவுகள் மற்றும் வழக்குகள்.

6 முறை அலறினால் – தீர்த்த யாத்திரை, தொலைதூர பிரயாணம்.

7 முறை அலறினால் – பொருள் வரவு, செல்வ சேர்க்கை போன்றவை ஏற்படும்.

8 முறை அலறினால் – நோய், துன்பம் போன்றவை ஏற்படுவதை குறிக்கிறது.

9 முறை அலறினால் – வாழ்க்கையில் சுபிட்சம், முன்னேற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts