பிந்திய செய்திகள்

எந்த காரியத்தை செய்தாலும் தோல்வி மட்டுமே ஏற்படுகிறதா? அவமானப்படுகிறீர்களா? பஞ்சமி திதியில் அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்!

நாம் ஒரு சில விஷயங்களில் தோல்வியுற்றால் பரவாயில்லை, எப்படியாவது சமாளித்து முன்னேறி விடலாம். எடுக்கும் எல்லா முயற்சியும் தோல்வியை தழுவினால் விரக்தி உண்டாகிவிடும். என்னடா வாழ்க்கை?

என்கிற வெறுப்பு மனதில் ஆழமாக பதிந்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டாகிவிடும். தொடர் தோல்விகளுக்கு வெற்றியை கொடுக்கும் வராஹி, பஞ்சமி திதி வழிபாட்டிற்கு உகந்தவராவார். சப்த மாதர்களில் வராஹி அம்மனும் ஒருவராக திகழ்கின்றார்.

பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் வராகி அம்மனை வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். தொடர்ந்து அவமானத்தை சந்தித்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இருப்பவர்களுக்கு வராகி நல்ல வழிகளைக் கூறுவார். அதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

புதிதாக தொழில் தொடங்குவது, கல்வி பயில்வது, திருமண சுபகாரியங்களை ஏற்பாடு செய்வது போன்ற விஷயங்களில் தடைகளும், தாமதங்களும் பஞ்சமி திதியில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே இருக்கும்.

எனவே நீங்கள் பஞ்சமி திதியில் வராகி வழிபாடு செய்து வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று உத்வேகத்துடன் இருப்பவர்களுக்கு வராகி அம்மன் துணையாக இருப்பாள். இவளை பற்றி கொண்டவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

உங்கள் வீட்டு காலண்டரில் இன்று என்ன திதி? என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் பஞ்சமி திதி வரும் நாள் அன்று பாம்பு புற்று இருக்கும் கோவில்களுக்கு செல்ல வேண்டும். அங்குள்ள அம்மனுக்கு ஐந்து எண்ணெய்கள் கொண்ட விசேஷ எண்ணெய் பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும்.

அல்லது அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சிகப்பு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அம்மனுக்கு நைவேத்தியம் படைக்க உளுந்த வடை, தயிர் சாதம், சுண்டல், மொச்சை, பானகம் அல்லது நவதானியம் கொண்டு செய்யப்பட்ட வடை இவற்றில் ஏதாவது ஒன்றை உங்களால் முடிந்த அளவிற்கு தயார் செய்து நிவேதனம் படைக்கலாம்.

அம்மனுக்கு நைவேத்தியம் படைக்கும் பொழுதும், தீபமேற்றும் பொழுதும், சந்நிதியை வலம் வரும் பொழுதும் வராஹி அம்மன் உடைய மேலே இருக்கும் அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சந்நிதியை சுற்றி ஒன்பது முறை வலம் வந்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

தீராத வறுமையால் துன்பப் படுபவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தோல்விகளை சந்திப்பவர்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மிகவும் சக்தி வாய்ந்த வராகி அம்மனை வழிபட்டால் நமக்கும் புதிய சக்தி பிறக்கும்.

உளியின் வலியைத் தாங்கிய சாதாரண கல் தான் அற்புதமான சிலை ஆகிறது. அது போல் தான் வாழ்க்கையில் தோல்விகளையும், அவமானங்களையும் சந்திப்பவர்களுக்கு தான் நாளை உலகம் வியக்கும் வெற்றி கிடைக்கும்.

அவமானத்தைக் கண்டு வீழ்ந்து விடாமல், உங்களைப் படைத்த இறைவனிடம் சரணடைந்தால் வாழ்க்கையில் நீங்களும் நிச்சயம் வெற்றியை காணலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts