பிந்திய செய்திகள்

இப்படி இறப்பவர்களுக்கு சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை! ‘பிரேத ஆத்மாவாக’ அலைய வேண்டியது தான்! கருட புராணம் கூறுகிறது!

ஒருவருடைய பிறப்பும், இறப்பும் அவர்களுடைய கைகளில் இல்லை. வாழும் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தான் இறப்பையும், பிறப்பையும் நிர்ணயிக்கிறது என்று கருட புராணம் கூறுகிறது. இந்து சமயத்தில் மக்கள் ஒழுக்கமுடன் வாழ்வதற்கு கருடபுராணம் பல்வேறு வகையில் குறிப்புகளால் உணர்த்தியுள்ளது.

அதில் இருக்கும் ஒவ்வொரு கருத்துகளும் நாம் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்பதை நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது. அந்த வகையில் நாம் எப்படி இறக்கக் கூடாது? அப்படி இறந்தால் அடுத்து என்ன நடக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்காக படைக்கப்பட்டது என்றாலும், அது நம்முடைய சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி கொள்பவர்களுக்கு நரகம் நிச்சயம். மற்றவர்களுக்காக வாழ்ந்து, நம்முடைய வாழ்க்கையும் நாம் அனுபவிப்பது தான் உண்மையான வாழ்க்கையாகும்.

வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், வாழ்ந்தது போதும் என்கிற மனப்பான்மை ஏற்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்து விடுவார்கள். இப்படி தன் உயிரை தானே மாய்த்துக் கொள்பவர்களுக்கு சொர்க்கத்திலும், நரகத்திலும் இடமில்லை.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதற்கு இறைவன் யாருக்கும் கட்டளை இடவில்லை. துணிச்சலுடன் எதிர்த்து போராடுவதே வாழ்க்கை. உங்கள் உயிரை கொடுத்தது அந்த இறைவன் தான்.

அதனை பறிப்பதற்கும் அவர் ஒருவருக்கே உரிமை உண்டு. விஷம் குடித்து சாவது, தூக்கு மாட்டிக் கொண்டு சாவது, தன்னைத் தானே எரித்துக் கொண்டு மரணிப்பது போன்ற முறையற்ற முறையில் இறந்து போனவர்களுக்கு பிரேத ஆத்மாவாக ஆலய விடுவார்களாம்.

ஒரு வீட்டில் துர் மரணம் ஏற்படுவது என்பது சாதாரண விஷயமல்ல. எந்த வீட்டில் துர் மரணம் ஏற்படுகிறதோ! அந்த வீட்டில் இருப்பவர்களை அவர்கள் எப்போதோ செய்த கர்ம வினை பழிவாங்குகிறது என்று அர்த்தம். முன் ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவ வினைகள் இந்த ஜென்மத்தில் உங்களையும், உங்களுக்கு பிறந்த சந்ததிகளையும் பின் தொடர்வதாக சாஸ்திரம் சொல்கிறது.

குறிப்பாக விலங்குகளால் குத்திக் கொள்ளப்படுவது மிகவும் மோசமான இறப்பாக கருதப்படுகிறது. மாடு முட்டி இறந்தவர்கள், யானை தன் தும்பிக்கையால் தூக்கி போட்டு இறந்தவர்கள், சிங்கம், புலி, கரடி போன்ற கொடூரமான விலங்குகளின் கைகளில் சிக்கி உயிரை விட்டவர்கள், பெரிய மீன்கள், முதலைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களின் வாயில் சிக்கி மாண்டவர்கள் என்று ஏராளமான வகைகளில், மற்ற உயிரினங்களால் ஒரு மனிதன் இறக்க நேர்ந்தால் அவர்களுக்கும் சொர்க்கத்திலும், நரகத்திலும் இடமில்லை. பிரேத ஆத்மாவாக அலைய வேண்டியது தான் என்கிறது கருட புராணம்.

அது போல் கழுகு தன் அலகினால் கொத்தி கொத்தி ஒரு உயிர் போகிறது என்றால் அந்த உயிர் போன ஜென்மத்தில் செய்யக்கூடாத மிகப் பெரிய தவறை செய்து இருப்பதாக அர்த்தம் ஆகிறது. பறவைகளின் அலகினால் கொல்லப்படும் உயிர் பிரேத ஆத்மாவாக அலைகிறது.

இப்படி பிரேத ஆத்மாக்களாக அலையும் உயிர்கள் மோட்சம் பெறுவதற்கு அவர்களுடைய சந்ததியினர் அவர்களுக்கு தவறாமல் பித்ரு வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி பித்ரு வழிபாடுகள் மேற்கொள்ளப்படாத ஆத்மாக்கள் சொர்க்கத்தில் இடம் இல்லாமல் நரகத்திலும் இடமில்லாமல் இடையில் ஆத்மாவாக அலைந்து கொண்டிருக்கும்.

இப்படி அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களின் சந்ததியினருக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளும், துன்பங்களும் வரும். யார் எப்படி சாகப் போகிறார்கள்? என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் இறந்த பின்பு ஒரு ஆத்மா முக்தி பெறுவதற்கு அவர்களுடைய சந்ததி செழிப்பாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு முறையாக இறை வழிபாடுகளையும், பித்ரு தர்ப்பணங்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts