பிந்திய செய்திகள்

இந்த 3 விஷயங்களை கடைப்பிடித்தால் இனி யாரிடமும் நீங்கள் ஏமாற மாட்டீர்கள்??

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜீவனும் அன்புக்காக தான் ஏங்கி நிற்கிறது. யாரிடம் உண்மையான அன்பு கிடைக்கும்? என்று தேடிக் கொண்டே பாதி வாழ்க்கை முடிந்து விடும். உண்மையான அன்பை தேடித் தேடி பல ஏமாற்றங்களையும், வலிகளையும் சந்தித்து இருப்பீர்கள். நீங்கள் அவர்களிடம் எவ்வளவு உண்மையாக இருந்தாலும், அவர்கள் உங்களிடம் அப்படி இருப்பதில்லை என்று தோன்றும். பிறகு நம்மிடம் யார் தான் உண்மையான அன்பை செலுத்துகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க இந்த 3 விஷயங்களை கடைபிடிக்கலாம். அப்படியான அந்த மூன்று விஷயங்கள் என்ன? என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா? அப்படின்னா தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒருவர் உங்கள் மீது உண்மையான அன்பு செலுத்துகிறார் என்றால் அவர்களிடம் நீங்கள் பிரச்சனை என்று சென்று நிற்கும் பொழுது, அவர்கள் அதற்கு பல வழிகளை உங்களுக்கு காண்பிக்க மாட்டார்கள். அப்படி வழிகளை மட்டுமே காண்பிப்பவர்கள் உண்மையான அன்பு உடையவராக இருக்க முடியாது. சிலர் அந்த பிரச்சனைக்கு வழியாகவே மாறி நிற்பார்கள். அவரிடம் பேசியதும் நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற ஞானம் பிறக்கும். அவரே உங்களிடம் உண்மையான அன்பை செலுத்துகிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒருவர் உங்களிடம் உண்மையான அன்பு செலுத்துபவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் உங்களை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். உங்கள் மீது தொடர்ந்து அக்கறையை செலுத்திக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் அந்த அக்கறையை வெறுத்தாலும் கூட, அவர்கள் காட்டும் அக்கறையில் இருந்து ஒருபோதும் விலகி நிற்க மாட்டார்கள். உங்களிடம் திரும்ப அந்த அன்பை கிடைக்குமா? என்று ஏங்கி பல காலங்களாக காத்து தவித்துக் கொண்டிருப்பார்கள்.

உங்களிடம் உண்மையான அன்பு செலுத்துபவர்கள் உங்கள் மீது அதிகம் பொசசிவ்னஸ் வைத்திருப்பார்கள். நீங்கள் மற்றவர்களிடம் அதிகமாக பேசினால் அவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். இந்த இடத்தில் தான் நாம் உன்னிப்பாக கவனித்து பார்க்க வேண்டும். எந்த விதமான உறவாக இருந்தாலும் உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் பொசசிவ்னஸ் கண்டிப்பாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ஒருவரிடம் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடனே உங்கள் மேல் அவர்களுக்கு வருத்தம் ஏற்படும். அந்த வருத்தத்தை காண்பிக்கும் பொழுது எப்படி காண்பிக்கிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும்.

நீ ஏன் இப்படி செய்கிறாய்? என்று அவர்களுடைய கோபம் உங்கள் மேல் திரும்பினால் அதில் நியாயம் இல்லை. உன்னிடம் ஏன் அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள்? என்று கோபத்தை உங்களிடம் பேசியவர் மேல் திருப்பினால் அதுவே உண்மையான அன்பாகும். இந்த இரண்டுக்கும் வித்தியாசத்தை தெரிந்து கொண்டால் உங்கள் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் யார்? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் உங்களுக்காக செய்த எந்த ஒரு விஷயத்தையும், எந்த ஒரு இடத்திலும் சொல்லிக் காட்ட மாட்டார்கள். அப்படி அவர்கள் சொல்லிக் காட்டினால் அவர்களுக்கு உங்கள் மேல் உண்மையான அன்பு இல்லை என்று தான் அர்த்தம். ஒருவர் மீது உண்மையான அன்பு வைத்தால் அவர்களுக்காக நாம் செய்யும் எந்த ஒரு விஷயமும் நமக்கு பெரிதாக தெரிவதில்லை.

அதுவே போலியான அன்பாக இருந்தால் நாம் அவர்களுக்கு செய்யும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு மனதில் அப்படியே நிற்கும். தேவையான பொழுது சொல்லி காட்டுவோம். இது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் குணாதிசயம் ஆகும். இது நபருக்கு நபர் வித்தியாசப்படும் என்பது மட்டுமே உண்மையாகும். இவற்றில் நாம் யார் மேல் போலியான அன்பை வைத்திருக்கிறோம்? நம்மிடம் யார் உண்மையான அன்பு வைத்திருக்கிறார்கள்? என்கிற இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். இது தெரிந்தால் இனியும் ஏமாறாமல் இருக்கலாமே!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts