பிந்திய செய்திகள்

உண்டியலில் பணம் நிரம்பி வழிய இந்த 4 பொருட்களை போட்டு வையுங்கள்

சிக்கனமாக செலவு செய்தால் நம்முடைய கையில் சேமிப்பு தங்கும். வரக்கூடிய வருமானத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட் போட்டு செலவு செய்யக்கூடிய குடும்பத்தில் மாதக்கடைசியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை நிச்சயம் இருக்காது. அனாவசிய செலவை குறைப்பது என்பது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. உங்களுக்கு அனாவசியமாக செலவு செய்யக்கூடிய பழக்கம் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், உங்களுடைய குழந்தைக்கு சிறுவயதிலிருந்தே சேமிப்பின் முக்கியத்துவத்தையும், அனாவசியமாக செலவு செய்வதில் வரக்கூடிய பிரச்சனைகளையும் சொல்லிக் கொடுத்தால், உங்கள் குடும்பம் எதிர் காலத்தில் செல்வச் செழிப்போடு சீரும் சிறப்புமாக இருக்கும்.

நம்முடைய வீட்டில் கட்டாயமாக ஒரு உண்டியல் இருக்கும். அது குழந்தைகள் பணம் சேர்த்து வைக்கும் உண்டியல் ஆக இருந்தாலும் சரி, அல்லது பெண்கள் பணம் சேர்த்து வைக்கக் கூடிய உண்டியல் ஆக இருந்தாலும் சரி, உண்டியலில் பணம் போடுவதற்கு முன்பு என்னென்ன பொருட்களை போட்டு வைத்தால் பண வசியம் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும் தெரிந்துகொள்வோமா.

முதலில் அந்த உண்டியலில் புதன் பகவானை நினைத்து 9 வெந்தயம் போட வேண்டும். அதன் பின்பு மகா லட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டு 9 கற்களை போடவேண்டும். அடுத்தபடியாக பெருமாளை நினைத்துக்கொண்டு 9 ஏலக்காய்களை போடுங்கள். அடுத்தபடியாக குபேர பகவானை நினைத்துக்கொண்டு 9 லவங்கம் போட வேண்டும். எல்லாமே ஒன்பது என்ற கணக்கில் இருக்கட்டும்.

அதன்பின்பு ஒரு ரூபாய் நாணயத்தை குலதெய்வத்தை வேண்டி அந்த உண்டியலில் போட்டுவிட்டு, தினமும் அந்த உண்டியலில் பணம் சேர்க்கும் வழக்கத்தை கொண்டு வந்தால், நிச்சயமாக உண்டியலில் சேர்க்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும். பணம் என்பது செலவு செய்யாமல் இருப்பதற்கு அல்ல. செலவு செய்ய அவசரத் தேவைக்கு பணம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சேமிப்பு என்ற ஒன்றை நாம் செய்கின்றோம். அந்த சேமிப்பு வீண்விரயம் ஆகிவிடக்கூடாது.

உதாரணத்திற்கு குழந்தையுடைய படிப்பிற்காக பணத்தை சேமிப்போம். அந்த பணம் தேவையில்லாத மருத்துவ செலவுக்கு வீணாக செலவாகும். வயிற்றை கட்டி வாயை கட்டி ஒரு சொந்த நிலம் வாங்க வேண்டும் என்று பணத்தை சேமித்து வைத்திருப்போம். அந்த பணத்தை நம்பி யாருக்கேனும் கடனாக கொடுத்து ஏமாற வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும்.

இப்படி எதிர்பாராமல், நாமுடைய தேவைக்காக சேர்த்து வைக்கக் கூடிய பணம் வீண் விரயம் ஆவதற்கு நம்முடைய கெட்ட நேரமும் ஒரு காரணமாக இருக்கும் அல்லவா. அந்த கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றுவதற்காக தான் நமக்கு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு தங்க நகைகள் வாங்க, குழந்தைகளை படிக்க வைக்க, வீடு கட்ட என்று சுப செலவுக்காக நீங்கள் பணத்தை சேர்த்து வைப்பதாக இருந்தால் மேலே சொன்ன பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு சேமிப்பு பல மடங்காகப் உயர்வதை கண்கூடாக பார்க்கலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts