பிந்திய செய்திகள்

இதை கோவிலில் நீங்கள் பெற்றால் உங்கள் எப்பேர்ப்பட்ட தலையெழுத்தும் தழைகீழாக மாறிவிடும் தெரியுமா?

பொதுவாக பெருமாளை தரிசனம் செய்யும் போது நாம் முதலில் அவருடைய திருப்பாதங்கள் தான் பார்க்க வேண்டும் அதன் பிறகு தான் கீழ்நோக்கிப் படியே மேலே சென்று அவருடைய திரு முகத்தை பார்க்க வேண்டும் என்பது நியதி. பெருமாளை விட, அவருடைய திருப்பாதங்களுக்கு மதிப்பு அதிகம். பெருமாள் திருப்பாதம் பித்தளை அல்லது செம்பு உலோகத்தால் வீட்டில் வாங்கி வைத்தால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பெருமாளுடைய திருப்பாதங்களை பணிந்து ஆசீர்வாதம் பெறுவதற்கு இணையானது தான் இந்த சடாரி வழிமுறை. இதனால் நமக்கு இருக்கும் ஆணவம் அழிந்து பக்தி மேம்படும். பெருமாள் கோவில்களில் கட்டாயம் சடாரி வைத்து, துளசி தீர்த்தம் கொடுத்து வழி அனுப்புவார்கள். இந்த சடாரியை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ராமர் ஆட்சி செய்த காலத்தை விட, அவருடைய திரு பாதுகை ஆட்சி புரிந்த ஆட்சி காலம் மிகவும் பெரிதாக பேசப்பட்டது என்று புராணம் வாயிலாக நம்மால் உணர முடிகிறது. அத்தகைய திருமால் திருப்பாதம் எவ்வளவு முக்கியமானது? என்பதை நீங்களே இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பெருமாள் கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது துளசி தீர்த்தம் கொடுக்கப் படுவது வழக்கம். அதே போல் கிரீடம் போலிருக்கும் ஒன்றை கொண்டு வந்து நம் தலையில் வைத்து எடுப்பார்கள். இதைத் தான் சடாரி என்று கூறுவார்கள்.

ஒவ்வொரு முறை நாம் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுதும் சடாரியை எவ்வளவுக்கு அதிகமாக நாம் நம் தலையில் வைத்துக் கொள்கிறோமோ! அந்த அளவிற்கு நம் தலையெழுத்து தலைகீழாக மாறும் என்பது ஐதீகம். இறைவனுடைய திருப்பாதங்களை நேரடியாக நாம் பணிந்து வணங்குவதற்கு சமமாக இருப்பது தான் இந்த சடாரி வழிபாடு முறை. திருப்பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியை நம் தலைமீது வைக்கும் பொழுது இறைவனே நேரடியாக நமக்கு அருள் புரிவதாக நம்பப்படுகிறது.

இத்தகைய பெருமைகள் வாய்ந்த சடாரியை வாழ் நாள் முழுவதும் எவ்வளவு வைத்துக் கொள்கிறோமோ! அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் நிகழும். இதை நீங்கள் செய்து பார்த்தால் உங்களுக்கே அதனுடைய அருமை புரியும். கோவில்களில் கடைபிடிக்கப்படும் ஒவ்வொரு சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. இது நம் முன்னோர்கள் வழி வழியாக கடைப் பிடிக்கப்பட்ட ஒரு விஷயம் ஆகும்.

சிலருக்கு வாழ்க்கையில் ராசி என்பதே இருக்காது. ராசி இல்லாதவர்கள் பட்டியலில் அவர்களிடம் பெற்றிருப்பார்கள். ஏதோ பிறக்கும் பொழுதே வாங்கி வந்த வரம் போல் தங்களைத் தாங்களே தாழ்வு படுத்திக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த சடாரியை தலையில் வைத்துக் கொள்வதால் அவர்களுக்கு இருக்கும் தரித்திரம், பீடை நீங்கி அவர்களும் ராசியாக மாறி விடுவார்கள். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். வார்த்தைகள் அத்தனையும் பலிக்கும் அற்புதம் நடக்கும். இனி பெருமாள் கோவிலுக்கு போனால் மிஸ் பண்ணாமல் சடாரியை தலையில் நீங்களே கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts