பிந்திய செய்திகள்

கலியுகத்தில் மனிதன் செய்யும் கொடூரமான பாவத்திற்கு மன்னிப்பே இல்லை..!

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாட்களில் செய்யும் புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அனுபவிக்கிறான். வாழும் காலத்திலேயே பாவங்கள் எதுவும் செய்யாமல், புண்ணியத்தை சேர்த்து வாழ்ந்து வந்தால் மோட்சம் நிச்சயம். பல யுகங்களாக மனிதன் செய்யும் தவறுகள் அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. அந்த வகையில் கலியுகத்தில் மனிதன் செய்யும் கொடுரமான பாவங்களில் 3 என்ன?

கலியுகத்தில் மனிதன் தான்தோன்றித்தனமாக செயல்படுவதும், சுயநலமாக சுற்றித் திரிவதும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தை முன்கூட்டியே கணிப்பவர்கள் பலரும் கலியுகம் இப்படித் தான் இருக்கும் என்று கணித்துள்ளனர். அப்படி இருக்க அவர்கள் கூறியபடி கலியுகத்தில் மனிதன் போடும் ஆட்டத்திற்கு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்ச நஞ்ச மனிதநேயம் இன்னும் ஒட்டிக் கொண்டு இருப்பதால் பூமி சுழன்று கொண்டிருக்கிறது.

மனிதன் செய்யும் பாவத்தில் கொடூரமான பாவமாக கருதப்படுவது பிறன்மனை நோக்குவது ஆகும். அதாவது அடுத்தவருடைய மனைவியை கண்ணெடுத்து பார்ப்பது கூட பாவமாக கருதப்படுகிறது. அப்படி இருக்க அடுத்தவருடைய மனைவியின் மீது ஆசைப்படுவதும், அடைய நினைப்பதும் எவ்வளவு பெரிய குற்றமாகும்? அதுவும் இந்த காலகட்டத்தில் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

அடுத்தவருடைய மனைவி என்று தெரிந்தும் அவருடன் தவறாக நடக்க முயற்சி செய்வதும், அவர்களுடைய மனதை கலைத்து மோகம் கொள்வதும் எக்காரணம் கொண்டும் மன்னிக்கவே முடியாத குற்றமாக ஆன்மீகம் குறிப்பிட்டு கூறுகிறது. தன் மனைவியை தவிர பிறன்மனை நோக்காதவன் மற்ற பாவங்கள் செய்திருந்தாலும் மோட்சம் அடைகிறான் என்பதும் குறிப்பிடதக்கது.

கலியுகத்தில் மனிதன் செய்யும் இரண்டாவது பாவமாக கருதப்படுவது அடுத்தவர்களுடைய சொத்தை அபகரிப்பது ஆகும். அதிகார, அரசு பதவியில் அமர்ந்து இருப்பவர்களும், சாதாரண மனிதர்களும் கூட கொஞ்சமும் பயம் இல்லாமல் செய்யும் இந்த சொத்து அபகரிப்பு அல்லது அடுத்தவருடைய பொருட்களின் மீது ஆசைப்பட்டு அபகரிப்பது போன்றவற்றை செய்து வருகிறார்கள்.

ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஒரு ரூபாயாக இருந்தாலும், அதை அவர்கள் அனுமதி இல்லாமல் அபகரிப்பது மன்னிப்பே இல்லாத குற்றமாக கருதப்படுகிறது. இந்தப் பாவத்தை செய்பவர்கள் இப்பொழுது உல்லாசமாக வாழ்ந்தாலும் நரகத்தில் அவர்களுடைய தண்டனை மிகவும் மோசமானதாக இருக்குமாம்.

கலியுகத்தில் மனிதன் செய்யும் மூன்றாவது தவறாக கருதப்படுவது கட்டிய மனைவியை கை விடுவது ஆகும். மனைவி மட்டுமல்ல, ஈன்றெடுத்த பெற்றோர்களை கைவிடுவதும் மன்னிக்கவே முடியாத குற்றம் என்று கருதப்படுகிறது. பெற்ற பிள்ளைகளை தன்னுடைய எல்லா சுகங்களையும் தியாகம் செய்து கஷ்டப்பட்டு வளர்க்கும் பொழுது, இறுதி காலத்தில் அவர்களை கண்டுகொள்ளாமல் கைவிடுவது எவ்வளவு பெரிய குற்றமாகும்.

அது போல் தன்னை நம்பி வந்த ஒருத்தியை அடுத்த ஆடவனுடன் ஒப்பிட்டு பேசுவது, ஆபாச வார்த்தைகளை உதிர்ப்பது, தரக்குறைவாக நடத்துவது, சந்தேகிப்பது, ஆண் ஆதிக்கம் செலுத்திக் பெண்ணை அடக்கி ஆள வேண்டும் என்று நினைப்பது போன்றவற்றை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நரகத்தில் கொடூரமான தண்டனை உண்டு.

இந்த தண்டனைக்கு எல்லாம் என்ன புண்ணியம் செய்தாலும் மன்னிப்பே கிடையாது. பிறன்மனை நோக்குவது, பெற்றோர்களையும், கட்டிய மனைவியையும் கைவிடுவது, அவமதிப்பது, பிறருடைய சொத்துக்களுக்கு ஆசைப்படுவது, அபகரிப்பது ஆகியவற்றை செய்யும் மனிதன் கலியுகத்தில் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் அவனுடைய வாழ்நாள் இறுதியில் அதற்கான தண்டனையை கொடூரமாக அனுபவிப்பான் என்பது விதியாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts