பிந்திய செய்திகள்

பெண்கள் வாழ்நாளில் அணியக் கூடாத அணிகலன்கள்! அணிவதன் மூலம் உண்டாகும் பாதிப்புகள்!

பொதுவாகவே பெண்கள் என்பவர்கள் கம்மல், மூக்குத்தி, செயின், வளையல், கொலுசு போன்ற அணிகலன்களை அணிவதுண்டு. இவ்வாறு பெண்கள் நகைகள் அணிவது நமது பாரம்பரிய முறையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நகைகள் அணிவதன் மூலம் உடலிலுள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.

உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு நிச்சயம் பெண்களின் உடலில் தங்கம் இருக்க வேண்டும். அவ்வாறு உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் சில அணிகலன்களை கட்டாயமாக அணிய வேண்டும். அது மட்டுமல்லாமல் உடலில் நோய்கள் வராமல் இருப்பதற்கும் இந்த அணிகலன்கள் உதவுகின்றன.

தங்கம், வெள்ளி, முத்து, பவளம் போன்ற அனைத்து உலோகத்திலான எந்த நகையாக இருந்தாலும் அதனை அணிந்து கொள்வது பெண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. அவ்வாறு பெண்கள் அணிய வேண்டிய நகைகள் மற்றும் நன்மைகளும், அவர்கள் அணியவே கூடாத நகைகள் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெண்கள் தங்கள் உடம்பில் நிறைய அறைகள் நகைகளை அணிந்தாலும் ஒருசில அணிகலன்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இவற்றின் மூலம் உடலில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும். அது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் கஷ்டங்களும் வர ஆரம்பிக்கும். அவ்வாறு பெண்கள் அணிகின்ற நகைகளில் மெட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

திருமணம் ஆனவுடனேயே பெண்கள் கட்டை விரலின் பக்கத்து விரல்களில் மெட்டி அணிவது உண்டு இந்த மெட்டி அணிவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் இந்த வராம புள்ளியில்தான் கர்பப்பையின் நரம்பு அனைத்தும் முடிவடைகின்றன.

இந்த மெட்டி அந்த விரலில் அழுத்தும் பொழுது நமது கர்ப்பப்பை பலப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் இதற்கு பக்கத்து விரலிலும் மெட்டி அணிகின்றனர். இவ்வாறு செய்வது குடும்பத்திற்கும் நல்லதல்ல, உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.

அடுத்ததாக கால்களில் அணியும் கொலுசு. பொதுவாகவே நம்முடைய மூதாதையர்கள் தண்டை என்ற பெயரில் கொலுசு அணிந்திருந்தனர். இன்றைய தலைமுறையினர் ஃபேஷன் என்ற பெயரில் ஒரு காலில் மட்டும் கொலுசு அணிகின்றனர். இவ்வாறு செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

இரண்டு கால்களில் கொலுசு அணிவது என்பது நமது கல்லீரல், சிறுநீரகம், கணையம் போன்ற அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் சரிபடுத்த உதவுகிறது. இவ்வாறு ஒரு காலில் கொலுசு அணியும் பொழுது நிச்சயம் உடல் பிரச்சினை என்பது ஏற்படும்.

அடுத்ததாக மூக்கில் அணியக்கூடிய மூக்குத்தி சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பிரச்சனையை சீராக்குகிறது. அதுமட்டுமல்லாமல் சுவாசத்தையும் சமன் செய்கிறது. ஆனால் இன்றைய தலைமுறையினரோ மூக்கிற்கு இடையே இருக்கும் தண்டு பகுதியில் மூக்குத்தி அணிகின்றனர். இவ்வாறு செய்வது உடல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

அடுத்ததாக பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படும் காதணி விழா. இதுதான் குழந்தை பிறந்து முதலில் அவர்களது உடலில் செய்யக்கூடிய முக்கிய விஷயமாகும். காதில் இவ்வாறு கம்மல் அணிவது நமது கண் பார்வையை பலப்படுத்துவதற்காக செய்யக் கூடிய விஷயமாகும்.

இதனாலேயே இதனை பாரம்பரிய விழாவாக அனைவரும் பின்பற்றி வந்தனர். ஆனால் இப்போது உள்ளவர்கள் அதனை தவிர்த்து காதின் மற்ற பகுதிகளான தண்டு பகுதிகளிலும் காதணி அணிகின்றனர். இவ்வாறு செய்வது நிச்சயம் உடலுக்கும் கேடு விளைவிக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts