பிந்திய செய்திகள்

வரப்போகும் சித்ரா பௌர்ணமி நாளை தவற விடாதீர்கள்.

இந்த மாதம் அதாவது சித்திரை 16-04-2022 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சித்ரா பவுர்ணமி வரவிருக்கின்றது. அதாவது தமிழ் மாதத்தில் சித்திரை 3ஆம் தேதி. நிறைந்த சித்திரா பௌர்ணமி தினத்தில் நம்முடைய குடும்பம் சுபிட்சமாக இருக்கவும், குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆயுள் பலத்தை அதிகரிக்கவும், நோய்நொடிகள் இல்லாமல் வாழவும், நம்முடைய வீட்டில் எந்த முறைப்படி எந்த இரண்டு பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஒரு ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நிறைய பேர் வீடுகளில் இன்று உயிர் இழப்பு என்பது சாதாரணமாகிவிட்டது. விபத்தின் மூலம் உயிரிழப்பு. எதிர்பாராத மரணம் ஏற்படுவது, இப்படியாக அல்பாயுசில் மரணங்கள் அடிக்கடி நடக்கின்றது. இதை தடுக்க ஒரு சக்தி வாய்ந்த பரிகார பூஜை முறை உங்களுக்காக இதோ. இந்த பூஜைக்கு நமக்கு கட்டாயம் இந்த 2 பொருட்கள் தேவை. தர்ப்பைப்புல், சித்தரத்தை. இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பவுர்ணமி தினத்தன்று காலை நேரத்திலேயே இந்த பூஜையை செய்யலாம். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். எப்போதும் போல உங்கள் வீட்டில் இருக்கும் விளக்குகளை ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரே ஒரு தர்ப்பைப் புல், ஒரே ஒரு சித்திரத்தை இந்த இரண்டு பொருட்களை எடுத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். தர்ப்பைப்புலை சிறியதாக மடித்து ஒரு தாயத்து அளவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். சித்தரத்தை என்பது தாயத்து அளவில்தான் இருக்கும். இப்போது இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக வைத்து ஒரு மஞ்சள் நிற நூலில் கட்டி விடுங்கள்.

விரலி மஞ்சளை காப்பு கட்டுவதற்காக தயார் செய்தோம் அல்லவா, அதேபோல இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக வைத்து மஞ்சள் நூல் போட்டு கட்டி, ஒரு காப்பு போலவே தயார் செய்து, உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, பூஜை அறையில் அமர்ந்து குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து விட்டு, ‘எங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆயுள் விருத்தி யோடு நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும்’ என்று மனதார ஒரு ஐந்து நிமிடங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி இந்த பிரார்த்தனையை முடித்துவிட்டு, உங்கள் கையில் இருக்கும் தர்ப்பை சித்தரத்தை காப்பை உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ளுங்கள். பௌர்ணமி நாள் முழுவதும் இது உங்கள் கழுத்திலேயே இருக்கட்டும். பூஜை செய்யும் ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இதை தங்களுடைய கழுத்தில் அணிந்து கொள்ளலாம். தவறு கிடையாது. பௌர்ணமி நாள் முழுவதும் இந்த இரண்டு பொருட்கள் உங்களுடைய கழுத்திலேயே இருக்கட்டும். மறுநாள் காலை கழுத்தில் இருக்கும் காப்பை பூஜை அறையில் கழட்டி வைத்து விடுங்கள். (இந்த 2 பொருட்களும் நன்றாக காய்ந்தவுடன் நூலை மட்டும் தனியாக எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து அந்த பொடியை தண்ணீரில் போட்டு கலந்து குளித்து விடலாம்.) இந்த பூஜையை சித்ரா பௌர்ணமி அன்று செய்ய முடியாதவர்கள் அடுத்து வரக்கூடிய பவுர்ணமி தினத்திலும் செய்யலாம்.

சில பேருக்கு ஜாதக கட்டத்தில் ஏதாவது கண்டம் இருக்கும். அவர்களுடைய உயிருக்கு ஆபத்து, அவர்கள் நீண்ட ஆயுளோடு இருக்க மாட்டார்கள் எனும் பட்சத்தில் அந்த தோஷம் விலகவும் இந்த பரிகார பூஜை நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts