பிந்திய செய்திகள்

வற்றாத பண வரவிற்கு சில்லறை நாணயங்களை வீட்டில் இப்படித்தான் போட்டு வைக்க வேண்டுமா?

ஒருவர் கஷ்டப்பட்டு என்னதான் சம்பாதித்தாலும் அது அவர்களிடம் தேவையான பொழுது இல்லை என்றால் பிரயோஜனம் அற்றது. உழைத்த உழைப்பு வற்றாத பணவரவாக மாறும் பொழுது தான் உங்களுக்கு முழுமையான உத்வேகம் கிடைக்கும். இதற்கு கண்டிப்பாக மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு தேவை. வீட்டில் வற்றாத பண வரவு உண்டாக சில்லறை நாணயங்களை என்ன செய்ய வேண்டும்?

பெரிய பெரிய கோவில்களில் எப்பொழுதும் சில்லறை நாணயங்களை எண்ணும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு திருப்பதி கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு சில்லரை நாணயங்கள் எண்ணும் ஓசையை கேட்டு இருப்போம். நாணயங்கள் எண்ணும் ஓசை குபேரனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. இதனால் வீட்டில் எப்பொழுதும் செல்வ வரவு தடைபடுவது இல்லை.

கட்டுக்கட்டாக நோட்டை அடுக்கி வைத்திருந்தாலும் சில்லறை நாணயங்களுக்கு அதிக மதிப்பு உண்டு. ஐநூறு, ஆயிரம் என்று மொய் வைத்தாலும் அதில் ஒரு ரூபாய் இருந்தால் தான் மொய் பணமாக கருதப்படுகிறது. யாகம், வேள்வி, விசேஷம், புண்ணிய காரியங்கள், கோவில் கைங்கரியங்கள் என்று எது நடந்தாலும் அங்கு சில்லறை நாணயங்களுக்கு தனி மதிப்பு உண்டு. சில்லரை நாணயங்கள் கேட்கப்படுவது இதற்காகத்தான்.

Pandaravadai Gulf Social Service Association | சென்னை:சில்லரை தட்டுபாட்டை  ஒழிக்க சில்லரை வழங்கும் ATM

இத்தகைய சில்லறை நாணயங்களை வீட்டில் ஆங்காங்கே குப்பை போல வைத்திருக்கக் கூடாது. இதனால் செல்வவளம் கண்டிப்பாக தடைபடும் என்கிறது ஜோதிடம். சில்லறை நாணயங்களை ஒரு கண்ணாடி அல்லது பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆன பாத்திரத்தில் நிரப்பி வையுங்கள். அதில் பணத்தை ஈர்க்கக்கூடிய பச்சை கற்பூரம் சிறிதளவு நொறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். –

பச்சைக் கற்பூரத்தின் மணம் வீடு முழுவதும் பரவும் பொழுது அங்கு எதிர் மறை சக்திகள் தங்குவது இல்லை. தெய்வத்தை ஈர்க்கக்கூடிய அதீத சக்தி பச்சை கற்பூரதிற்கு உண்டு. இதனால் பச்சைக் கற்பூரத்துடன், சில்லரை நாணயங்களைப் போட்டு வைத்தால் அங்கு தெய்வ சக்தி ஈர்க்கப்படுகிறது. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் பணவரவுக்கு தடை இருக்காது. இந்த சில்லறை நாணயங்கள் எங்கெல்லாம் வைக்க வேண்டும்? என்கிற விதிமுறையும் உண்டு.

சில்லரை நாணயங்கள், பச்சைக் கற்பூரம் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இந்த பாத்திரத்தை பூஜை அறையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமில்லை! இதிலிருக்கும் நாணயங்களை எடுத்து செலவு செய்யலாமா? என்று கேட்டால், கண்டிப்பாக செலவு செய்து கொள்ளலாம். மீண்டும் உங்களுக்கு நாணயங்கள் கிடைக்கும் பொழுது அதில் போட்டுக் கொண்டே வர வேண்டும். பூஜை அறையில் மட்டுமல்லாமல் நீங்கள் பணம் வைக்கக்கூடிய பீரோவிலும் வைக்க வேண்டும். வடக்கின் அதிபதியாக இருக்கும் குபேரன் இருக்கும் திசையில் கண்டிப்பாக இப்படி செய்து வைக்க வேண்டும்.

ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு | Oru rubai nanayam Tamil

அந்த இடத்தில் எந்த பொருள் இருந்தாலும், அதனை அப்புறப்படுத்திவிட்டு இப்படி சில்லரை நாணயங்கள் உடன் கூடிய பச்சை கற்பூரத்தை வையுங்கள்! அங்கு குபேர பகவான் அருள் புரிகிறார். அதே போல அன்னபூரணி வசிக்கும் சமையலறையிலும் ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாணயங்கள் தேவைப்படும் பொழுது செலவு செய்து கொண்டும், மீண்டும் அதில் போட்டுக் கொண்டும் இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாணயங்கள் கரையாமல் இருந்தால், விரைவில் இழந்த எல்லாமே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அது மட்டுமல்லாமல் செல்வ சேர்க்கை, பண வரவு தடையில்லாமல் உண்டாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts