பிந்திய செய்திகள்

காலையில் எழுந்ததும் இந்த செடியை பார்த்தால் அதிர்ஷ்டம் தானாக வரும்!

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையை பார்த்து விழித்தால் அன்றைய நாள் முழுவதும், உற்சாகத்துடன் காணப்படுவோம் என்றும், தடைகள் இல்லாத வெற்றிகளை அடையலாம் என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது. இதை எத்தனை பேர் கடைபிடித்து வருகின்றனர் என்பது நமக்கு தெரியாது.

ஆனால் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இந்த செடியை பார்த்து கண் விழித்தால் அன்றைய நாள் முழுவதும் அதிர்ஷ்ட மழை பொழியும் என்கிற ஒரு நம்பிக்கையும் இருந்து வருகிறது. அது என்ன? என்பதைப் பற்றிய ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை நமக்கு அனுதினமும் எவ்வளவோ வேலைகளும், எவ்வளவவோ கவலைகளும் இருக்கின்றன. நம் வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாளிப்பது மட்டுமல்லாமல், புதிதாக நாம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. பல தடைகள், பல அவமானங்களை சந்தித்து அன்றைய நாள் முழுவதும் கடக்க வேண்டியிருக்கிறது.

அதிர்ஷ்டம் தரும் செடிகள் | Things to do in the morning at home

நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் ஏதோ ஒரு வகையில் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்து செல்கின்றனர். எனவே எவரையும் பகைத்துக் கொள்ளாமல், அவரால் நமக்கு இன்று ஒரு பாடம் கிடைத்தது என்கிற மன நிறைவோடு நம்முடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு சென்றால் மனக்குழப்பம், மன சஞ்சலம், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபட்டு விடலாம். சிக்கலான விஷயத்தை கூட வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் ரொம்பவே அற்பமாக தெரியும்.

ஒரு நாளில் நாம் இவ்வளவு விஷயங்களை கடக்க வேண்டி இருக்கிறது. இதற்கு ஆரம்பமாக இருக்கும் முதல் பார்வை நல்ல விஷயங்களின் மீது படும் பொழுது அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பதாக ஒரு நம்பிக்கை நமக்குள் எழும். எனவே நாளையிலிருந்து நீங்கள் பார்க்கக் கூடிய முதல் பொருள் என்ன? என்பதை கவனித்து பாருங்கள். அதற்கு உரிய பலன்களும் அந்த நாளில் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

காலையில் எழுந்ததும் மகாலட்சுமி படத்தினை பார்த்துவிட்டு எழும்படி நீங்கள் அமைத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் பணவரவுக்கு தடை இருக்காது. வர வேண்டிய இடங்களில் இருந்து வர வேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

அது போல உங்களுடைய உள்ளங்கையை பார்த்தால் வெற்றிகள் குவியும். உங்களுக்கு பிடித்தமான மனைவி, தாயார் அல்லது உங்களுக்குப் பிடித்தமான உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவரை நீங்கள் பார்த்து விட்டு எழுந்தால் அன்றைய நாள் முழுவதும் ஒரு விதமான குதூகலத்துடன் காணப்படுவீர்கள்.

இந்த வகையில் உங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய அதிர்ஷ்ட செடிகள் சிலவற்றை நீங்கள் பார்க்கும் பொழுது எங்கிருந்தாவது அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அத்தகைய செடிகளில் முதன்மையாக இருக்கும் செடி துளசி! துளசிச் செடியை கண் விழித்தவுடன் கண்ட பின்பு நீங்கள் மற்ற பொருட்களை பார்த்தால் அன்றைய நாளில் அதிர்ஷ்டம் வரும்.

வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?- Dinamani

அது போல சோற்றுக்கற்றாழை, கருந்துளசி, கற்பூரவள்ளி, மாதுளை பூ, மல்லி பூ, மணி பிளான்ட், வாஸ்து செடிகள், குலை தள்ளும் வாழை மரம் போன்றவற்றை பார்த்து விட்டு எழுந்தால் அன்றைய நாளில் அதிர்ஷ்டங்கள் உங்களை நாடி வரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts