பிந்திய செய்திகள்

வாழ்வில் வெற்றி பெற 1 டம்ளர் தண்ணீரை இப்படி குடித்து வாருங்கள்

நமக்கும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல ஆசை இருக்கின்றது. இந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற எவ்வளவோ கஷ்ட படுகின்றேன். ஆனால் இருக்கின்ற நிலையிலிருந்து ஒரு படி கூட முன்னேற முடியவில்லையே. என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரவே இல்லையே. என்னதான் செய்வது?

என்ற கேள்வி உங்களுக்குள் இருந்தால் இது உங்களுக்கான பதிவு. செல்வாக்கும் சொல்வாக்கும் படிப்படியாக உயர ஒரு சிறிய தாந்திரீக ரீதியான பரிகாரம் உங்களுக்காக. முந்தைய நாள் இரவே சுத்தமான ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அது செம்பு டம்ளராக இருந்தால் இன்னும் உத்தமம். அந்த தண்ணீரில் கிராம்பு 1, அருகம்புல் 2, வில்வ இலை – 1, அறுகம்புல்லை சிறிய துண்டுகளாக வெட்டி அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மூடியை போட்டு மூடி பூஜையறையில் அந்த டம்ளர் தண்ணீரை வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு இந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். உள்ளே இருக்கும் வில்வம் அருகம்புல் கிராம்பை எடுத்து விட்டு வெறும் தண்ணீரை மட்டும் குளித்தால் கூட போதும். கிழக்கு பார்த்தவாறு நின்று இந்தத் தண்ணீரைப் பருகிவிட்டு ‘என்னுடைய வாழ்வில் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரவேண்டும். படிப்படியான முன்னேற்றம் கிடைக்க வேண்டும். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும் வேண்டும்’. என்று இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அன்றாட வேலையை தொடங்கவேண்டும்.

இப்படி எத்தனை நாட்கள் செய்வது நாற்பத்தி எட்டு நாட்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து இந்த தண்ணீரை குடித்து வாருங்கள் போதும். அதன் பின்பு நீங்கள் நினைத்தாலும் உங்களால் ஓய்ந்து உட்கார முடியாது. உங்களுடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உங்களை மேலே உயர்த்திக் கொண்டு செல்ல ஆரம்பித்து விடும்.

இன்று மனிதர்களாக பிறந்த நிறைய பேருக்கு தாழ்வுமனப்பான்மை அதிகமாக உள்ளது. குறிப்பாக, பலமுறை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்து விழுந்தவனுக்கு மீண்டும் எழவே முடியாத நிலமை. நம்மால் இந்த உலகத்தில் வாழ முடியுமா என்ற கேள்விக்குறியோடு நிறைய மனிதர்கள் வாழ்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்து வர அவர்களுக்குள் புதிய உத்வேகம் பிறக்கும்.

தொடர்ந்து 27 நாட்கள் இந்த தண்ணீரை குடித்து வரும்போதே உங்களால் உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் மாற்றத்தை உணர முடியும். இது தவிர உங்களுடைய உடம்பில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத பிணிகளை நீக்கவும் இந்த தண்ணீர் நல்ல மருந்தாக செயல்படும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts