பிந்திய செய்திகள்

இரவு தூங்கும் பொழுது நிம்மதியாக தூங்க எந்த பொருட்களையெல்லாம் பார்க்கலாம் தெரியுமா

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒருவர் மனம் அமைதி அடைந்து, நிம்மதியான உறக்க நிலைக்கு செல்வதற்கு உதவக் கூடிய பொருட்கள் என்னென்ன? தூங்கும் முன் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது போன்ற அரிய தகவல்களைபார்ப்போம்

நீங்கள் தூங்கும் முன்பு எப்பொழுதும் என்ன செய்வீர்கள்? என்று பட்டியலிடுங்கள். சாப்பிட்ட நேரத்திலிருந்து, தூக்கம் வரும் நேரம் வரை இடைப்பட்ட காலத்தில் நீங்கள் அதிக பட்சம் அதிகமாக என்ன செய்வீர்கள்? பெரும்பாலான மக்கள் சாப்பிட்ட பின்பு தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் போன், லேப்டாப் போன்ற நவீன கருவிகளை உபயோகிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவை இல்லாத காலகட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பொருட்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மற்றும் ஒளி அலைகள் நம்முடைய மூளையை குழம்ப செய்து பகல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் தூக்கம் என்பது வருவதற்கு காலதாமதம் உண்டாகிறது. அதிக வெளிச்சம் தரக்கூடிய பொருட்களை இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு தவிர்த்து விட வேண்டும். இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் உணவருந்தி விட வேண்டும். இப்படி முடியாதவர்கள் அதிகபட்சம் 9:30 மணிக்குள்ளாக படுக்கைக்கு சென்று விட வேண்டும்.

அதன் பிறகு இனிய பாடல்களை கேட்பது மிகவும் நல்லது. இனிய பாடல்கள் என்கிற பெயரில் அதிக ஓசை மற்றும் ஒலி தரக்கூடிய நவீன பாடல்களை கேட்டால் இருக்கின்ற தூக்கம் போய்விடும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் குறுஞ்செய்திகளில் உரையாடுவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது சுவாரஸ்யம் மேலிட துவங்கும், இதனால் வருகின்ற தூக்கமும் வந்த வழியே திரும்பி விடும்

நல்ல புத்தகங்களை படிப்பது, இனிய மெல்லிய ஓசை உள்ள பாடல்களை தேர்ந்தெடுத்து கேட்பது தூக்கத்தை வரவழைக்கும். அது மட்டுமல்லாமல் சில பொருட்களை பார்க்கும் பொழுது, நம்முடைய மனம் அமைதிப்பட துவங்கும். அத்தகைய பொருட்களில் ஒன்று வயலின் வாசிக்கும் கருவி. இக்கருவியின் படத்தை கொஞ்ச நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தால், அதை இசைப்பது போன்று மனதில் கற்பனை செய்து கொண்டு இருந்தால் பத்து நிமிடத்தில் நல்ல தூக்கம் வந்துவிடும்.

நிலவின் ஒளியில் அமர்ந்து அல்லது வாக்கிங் செய்து கொண்டு வெண்ணிலவை பார்த்துக் கொண்டும், அதனிடம் பேசிக் கொண்டும் பத்து நிமிடம் இருந்து பாருங்கள். அற்புதமான தூக்கம் உங்கள் கண்களை தழுவ ஆரம்பிக்கும். மயில் தோகை விற்பது போன்ற படங்கள், கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் சிலைகள், ஒரு பானை நிறைய செல்வங்கள் குவிந்து இருப்பது போன்ற பொக்கிஷங்கள் பார்ப்பது தூக்கத்தை வரவழைக்கும்.

அது மட்டுமல்லாமல் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை ஹெட் போன் போட்டுக் கொண்டு 15 நிமிடம் அமைதியாக கேட்டு பாருங்கள். ‘ஓம்’ எனும் மந்திரத்தை தவிர அதில் வேறு எதுவும் ஒலிக்கக் கூடாது. கேட்க முடியாதவர்கள் அதனை நீங்களே வாயால் உச்சரிக்கலாம்! அடிவயிற்றிலிருந்து எழும்பி, உச்சந்தலைக்கு செல்லும் இந்த ஓசையின் அதிர்வலைகள் நம் தூக்க நரம்புகளை தூண்டி விட்டு தூக்கம் வரவழைக்கும் அற்புத மருந்தாக இருக்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இந்த பொருட்களைப் பார்த்தும், இந்த விஷயங்களை செய்தும் பயனடையலாமே!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts