பிந்திய செய்திகள்

துளசி மருந்து, பிரசாதம் மட்டுமல்ல, செல்வத்தை தரும் மகாலட்சுமி வாசம் செய்யும்துளசி நன்மைகள் பற்றி பார்ப்போம்

அனைத்து பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாள், மகாலட்சுமி, அனுமன் போன்ற தெய்வங்களுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதே போல துளசி பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வைத்தியத்திற்கான மூலிகையாகவும் திகழ்கிறது.

இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல மகாலட்சுமியின் வடிவாக துளசி செடியைப் பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தில் பல்வேறு குடும்ப பிரச்சினைகள், நிதி பிரச்னைகளுக்கு தீர்வாக துளசி செடி வளர்ப்பு, துளசி இலை, வேர் என அனைத்தும் அதிர்ஷ்டத்தை அருளும் ஒரு மகாலட்சுமி அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

நவகிரக சாந்தி தரும் துளசி
ஒருவரின் ஜாதகத்தில் நவகிரகம் அல்லது சனி தோஷம் போன்ற தோஷம் இருந்தால், அதை போக்க துளசி வேரை தாயத்து செய்து கழுத்தில் அணியுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் எல்லாவிதமான தோஷங்களில் இருந்தும் விடுதலை பெற முடியும்.

வீட்டில் இருந்து எதிர்மறையை நீக்கலாம்
தினமும் குளிக்கும் போது துளசி இலைகளை சிறிது அந்த நீரில் போட்டு நீராடினால், மகாலட்சுமியின் அருளால், உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, பொருளாதார பிரச்சனைகளும் தீரும். மேலும், நவக்கிரக தோஷத்திற்கும் இந்த பரிகாரத்தைச் செய்யலாம்.

பணம் பெருகும்
வீட்டில் பொருளாதார பிரச்னை, வருமை இருந்தால், செல்வ வளம் பெற துளசி வேரை வெள்ளி கும்பத்தில் போட்டு வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் குடும்ப நிதி சிக்கல்கள் தீரும். மேலும், உங்கள் நிதி நிலை முன்பைவிட வலுவாக இருக்கும்.

துளசி வேர் மண்
தினமும் குளித்த பின், துளசி செடியின் வேரில் இருந்து மண்ணை எடுத்து நெற்றியில் போட்டு வைத்துக் கொள்ளவும். நேர்மறை சக்திகளின் அம்சமாக துளசி திகழ்வதால், நம் மனம் அமைதி பெறுவதோடு, மற்றவர்களை எளிதில் உங்கள் போக்குக்கு ஈர்க்கக்கூடிய சக்தியும் அதிகரிக்கிறது. அதாவது, மற்றவர்கள் விரைவில் உங்களின் பேச்சை ஏற்றுக் கொள்வார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts