பிந்திய செய்திகள்

ஆயுள் விருத்திக்கு செய்யக்கூடிய தானம் என்ன?

ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு செய்யக்கூடிய தானம் என்ன? என ஆன்மிகம் கூறுகிறது தெரியுமா? பொதுவாக தானத்தில் பல வகைகள் இருந்தாலும் நாம் செய்யக்கூடிய தானம், எந்த விதமான பலன்களை கொடுக்கும்? என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

தெரிந்து, பலனை எதிர்பார்த்து செய்யக்கூடிய தானங்களை காட்டிலும், அறியாமல் நீங்கள் செய்யும் தானம் இரட்டிப்பு பலன்களைக் கொடுக்கும்.

அந்த வகையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தெரியாமல் செய்த இந்த தானம் கூட உங்களுடைய ஆயுளை நீட்டித்துக் கொள்கிறது. ஆயுளை அதிகரிக்க செய்யக்கூடிய தானம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒருவர் நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு செய்யக்கூடிய இந்த தானம் நாம் அறிந்தும், அறியாமலும் நம்முடைய வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

நமக்கு தெரியாமல் அடிக்கடி ஆபத்து வருவது, விபத்துக்கள் நேர்வது போன்றவை இருக்கும் பொழுது ஆயுள் விருத்திக்காக இந்த தானத்தைச் செய்து வரலாம்.

பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் இந்த தானத்திற்கு அதிக சக்தி உண்டு. இந்த தானம் செய்வதால் நல்ல தேவதைகள் மகிழ்ந்து ஆசீர்வதிப்பதாக கூறப்படுகிறது. எனவே நம் கர்ம வினைகள் குறைந்து நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

நீண்ட ஆயுளை கொடுக்கக் கூடிய தானம் ‘வஸ்திர தானம்’ ஆகும். நம்மிடம் இருக்கும் பழைய துணிமணிகளை நல்ல நிலையில் இருந்து பயன்படுத்தாமல் இருந்தால் அதை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் உபயோகமானவர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பழைய கிழிந்த துணி மணிகளை எக்காரணம் கொண்டும் தானம் செய்யாமல் இருக்க வேண்டும். இது வஸ்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

அழுக்கு படிந்த துணி மணிகள், சாயம் போன துணிமணிகள், பயன்படுத்த முடியாத நிலையில் கிழிந்து போன துணிமணிகளை தானம் செய்பவர்களுக்கு வஸ்திர தோஷம் ஏற்படும். இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

எனவே இந்த ஒரு தவறை தவறியும் செய்து விடாதீர்கள். இவ்வாறான துணிமணிகளை தண்ணீரில் விடாமல், நெருப்பு கொண்டு அழித்து விடுவது நல்லது.

வஸ்திர தானம் என்பது பழைய துணிமணிகளை தானம் செய்வது மட்டுமல்ல! புதிய துணிமணிகளை வாங்கி கொடுப்பது தான் உண்மையான வஸ்திர தானம் ஆகும்.

உங்களிடம் இருப்பதை கொண்டு இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், முதியவர்களுக்கும், அங்கஹீனம் உள்ளவர்களுக்கும் வஸ்திர தானம் செய்யுங்கள். வஸ்திர தானத்தை அடிக்கடி செய்து வருபவர்களுக்கு வளமான வாழ்வும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நல்ல நாள், விசேஷம், பிறந்த நாள் என்று வரும் பொழுது நீங்கள் மட்டும் உங்களுக்கு புத்தாடைகளை வாங்கிக் கொள்ளாமல் உங்களுடைய இளைய சகோதரர்கள், சகோதரிகள் அல்லது அவர்களுடைய பிள்ளைகள், பெற்றோர்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கும் சேர்த்து நீங்கள் வாங்கி கொடுத்தால் உங்களுடைய குறைந்த ஆயுள் கூட மேலும் நீடிக்கும்.

நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இதை விட சிறந்த தானம் இருக்க முடியாது! எனவே நம்மால் இயன்ற வரை வருடத்திற்கு ஆறு வஸ்திரங்கள் குறைந்தது தானம் செய்து நீண்ட ஆயுளைப் பெற்று கொள்ளலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts