பிந்திய செய்திகள்

உங்கள் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு இதை மட்டும் கொடுத்தனுப்புங்கள்

பொதுவாக நம் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவது வழக்கம். பெண்கள் மட்டுமல்லாமல் யார் நம் வீட்டிற்கு வந்தாலும், அவர்களுக்கு ஒரு சொம்பு தண்ணீரை முதலில் கொடுக்க வேண்டும் என்பது நியதி!

தவித்த தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் ஏழேழு பிறவிக்கும் அதற்கான புண்ணிய பலன்களைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. இந்த வகையில் நம் வீட்டிற்கு வரக் கூடிய பெண்களுக்கு இந்த ஒரு பொருளை கொடுத்து வழி அனுப்பினால் வற்றாத செல்வம் சேர்ந்து கொண்டே செல்லும்

விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு ஆகும். முந்தைய காலங்களில் திண்ணை வைத்த வீடுகள் தான் அதிகம் இருக்கும். வழிப்போக்கர்கள், யாத்திரைக்கு செல்பவர்கள், வயோதிகர்கள் இளைப்பாறுவதற்கு என்று இவ்வாறு திண்ணைகள் கட்டி வைத்தனர். அவர்கள் வந்து அமரும் பொழுது அவர்களுக்கு வயிறார உணவு பரிமாறினால் நம்மை எத்தகைய பிரச்சனைகளும் நெருங்க கூட செய்யாது, இறைவன் நம்மை பாதுகாப்பார் என்று தமிழர்கள் ஆழமாக நம்பி வந்தனர்.

அடுத்தவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள நம் முன்னோர்கள் வாழ்ந்த இம்மண்ணில் இன்று நாம் நம் சொந்த ரத்தத்திற்கு கூட உதவி செய்வதில் பாரபட்சம் பார்க்கின்றோம் என்பது தான் வேதனைக்குரியதாக இருக்கிறது. மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்வது தவறில்லை! ஆனால் புண்ணியத்தை குறைத்து, பாவத்தை சேர்த்துக் கொண்டே செல்வது வருங்காலத்திற்கு நல்லதல்ல என்பது தான் நிதர்சனமான உண்மை.

வீட்டிற்கு வரும் சொந்த பந்தங்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு நிறைய தண்ணீரை கொடுக்க வேண்டும் அல்லது குளிர்ந்த நீர் மோர் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் மனமும், வயிறும் குளிர்ந்து நம்மை பொறாமை குணத்துடன் பார்க்காமல், நல்ல நட்புறவுடன், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

அது போல வயதில் குறைந்தவர்கள் அல்லது வயதில் பெரியவர்கள் யாராக இருந்தாலும் பெண்கள் நம் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்ப வேண்டும். தாம்பூலம் கொடுக்க முடியாதவர்கள் ஒரு மஞ்சள் கிழங்கை கொடுத்து வழியனுப்புவது குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் தடை இல்லாமல் நடப்பதற்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். அந்த வகையில் செல்வம் நம் வீட்டில் வற்றாமல் பெருகிக் கொண்டே செல்வதற்கு அப்பெண்களுக்கு மருதாணி இலை அல்லது மருதாணி, மருதாணி பவுடர் போன்றவற்றை வாங்கிக் கொடுத்தால் அற்புதமான பரிகாரமாக இருக்கும் என்கிறது சாஸ்திரங்கள்.

மருதாணி என்பது மங்கலத்தின் அடையாளம். மருதாணி ஒரு பெண்ணிற்கு அழகு தரும் பொருள் மட்டுமல்ல, ஆரோக்கியம் தரக்கூடிய பொருளும் ஆகும். மனதை மகிழ்ச்சியுடனும், இறுக்கம் இல்லாமலும் வைத்திருக்கக் கூடிய அற்புதமான ஒரு தெய்வீக மூலிகை என்றே கூறலாம். மருதாணியில் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். எனவே வீட்டிற்கு வரும் பெண் என்கிற மகாலட்சுமிகளுக்கு நீங்கள் மருதாணி கொடுத்து வழி அனுப்பினால் மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்து வீட்டில் எப்பொழுதும் வறுமை இல்லாமல், வற்றாத செல்வம் பெருகிக் கொண்டே செல்லும் என்பது ஆன்மீக சூட்சம குறிப்பாகும். யார் எவர் வந்தாலும் உங்களுடைய முகம் சுழிக்காமல், இன்முகத்துடன் வரவேற்று, அவர்களுடைய வயிற்றை குளிர செய்வது ஏழேழு பிறவிகளுக்கும் உங்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts