பிந்திய செய்திகள்

கோவிலுக்கு செல்பவர்கள் இதை செய்தால் கஷ்டம் தான் வந்து சேரும்!

நம்மிடம் இருக்கின்ற தீவினைகளை அகற்றி, நம் பரம்பரைக்கே புண்ணியம் தரும் புனித தலமாக விளங்கும் இடம் தான் கோயில். உலகில் செய்யப்படுகின்ற எந்த ஒரு காரியத்திற்கும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கு ஆன்மீகமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் நாம் கோயிலுக்கு செல்லும் போதும், கோயிலில் இருக்கின்ற இறைவனை வழிபடும் போதும் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பதை குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லா கோயில்களிலும் பலிபீடம் என்கிற ஒரு அமைப்பு இருக்கும். கோயிலை வலம் வருபவர்கள் கட்டாயம் அந்த பலிபீடத்தையும் வலம் வந்து வணங்க வேண்டும்.

அதேநேரத்தில் கோயிலின் மூலவர் விக்கிரகம் இருக்கின்ற கர்ப்பக்கிரக சந்நிதிக்கும், அதற்கு எதிராக இருக்கின்ற பலிபீடத்திற்கும் இடையில் உள்ள பகுதியை குறுக்காக கடந்து செல்லக் கூடாது.

விளக்கு ஏற்றப்படாத கோயில்களில் இறை வழிபாடு செய்யக்கூடாது. கோயிலில் மணியோசையின்றி பூஜைகள் நடத்தப்படக் கூடாது. கோயில் கர்ப்பகிரகத்தில் திரைச்சீலை மூடப்பட்ட பின்பு தெய்வத்தை வணங்கக் கூடாது.

கோயிலில் பலிபீடம், கொடிமரம் ஆகிய இரு இடங்களை தவிர வேறு எங்கும் நெடுஞ்சாண்கிடையாக பஞ்சாங்க, அஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது. மேலும் கோயிலில் தெய்வத்திற்கு அபிஷேகம் நடை பெறுகின்ற சமயத்தில் கோயிலை வலம் சென்று வழிபடக்கூடாது.

கோயிலின் கோபுர நிழல், கொடிமர நிழல்களை நமது பாதங்களால் மிதிக்கக்கூடாது. முடிந்தவரை அந்த நிழல்களை சுற்றியோ அல்லது தாண்டியோ செல்ல வேண்டும்.

கோயிலுக்கு அருகில் இருக்கின்ற வீட்டின் மாடி பகுதியிலோ அல்லது கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் மரத்தின் உச்சி கிளையிலோ அமர்ந்தவாறு இறைவனை தரிசனம் செய்யக்கூடாது.

கோயிலுக்கு அருகாமையில் வீடு கட்டுபவர்கள், தங்களின் வீட்டின் உயரத்தை கோவில் கோபுரங்களின் உயரத்தை விட குறைவாக அமைத்துக் கொள்வதே நல்லது.

பெருமாள் கோயிலில் பெருமாளை வழிபடும் போது, அவருக்கு எதிராக நின்று வழிபடுவதைக் காட்டிலும் வலதுபுறம் அல்லது இடதுபுறம் என ஏதேனும் ஒரு பக்கம், பக்கவாட்டில் நின்றே அவரை வழிபடுவது சிறப்பு. பெருமாள் கோயிலுக்கு வழிபடச் செல்லும் போது அக்கோயிலில் குங்குமம், துளசி பிரசாரங்களையும், சடாரி மரியாதையையும் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிவன் கோயில்களில், கோயிலின் காப்பாளராக கருதப்படும் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கும் சன்னதியில், அவருக்கு முன்பாக சத்தமாக கைதட்டி வழிபடக்கூடாது.

கோயிலில் தரப்படுகின்ற திருநீறு, விபூதி, குங்குமம், துளசி, தீர்த்தம் போன்றவற்றை கோயில் வளாகத்தில் அல்லது வெளியிலோ கீழே சிந்துவதை தவிர்க்க வேண்டும்.

கோயில் பிரசாத துளசியை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. ஆண்கள் தங்களின் காது இடுக்குகளில் பக்தியை காட்டும் விதமாக பூக்களை வைத்துக் கொள்ளக் கூடாது.

கண்ணாடியை பார்த்தவாறு உடலில் திருநீற்றை மியூசிக் கொள்ளக் கூடாது. திருமாலை வழிபடும் போது கன்னத்தில் அடித்துக் கொண்டு வழிபடக்கூடாது.

சிவன் கோயிலுக்கு சென்ற பிறகு அக்கோயிலில் காணிக்கை செலுத்தாமல் திரும்பக்கூடாது. பொதுவாக பெண்கள் முருகப்பெருமானுக்குரிய வேல் மற்றும் சிவபெருமானை குறிக்கின்ற லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யக்கூடாது.

கோயில்களில் சூடம் மற்றும் தீபத்தை வெறும் கைகளால் ஏந்தி தெய்வங்களுக்கு ஆரத்தி காண்பிக்க கூடாது. அமாவாசை தினத்தன்று நம் வீட்டில் மட்டும்தான் நாம் உணவு உண்ண வேண்டும். முடிந்தவரை அன்றைய தினத்தில் பிறருக்கு அன்னதானம் அளிக்கலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts