பிந்திய செய்திகள்

வீட்டில் பூஜை செய்யும் பொழுது எந்தெந்த விஷயங்கள் அப சகுணத்தை குறிக்கும்

நீங்கள் செய்யவிருக்கும் காரியம் வெற்றி அடையுமா? அல்லது தோல்வி அடையுமா? என்பதற்கு அறிகுறிகளாக இவை தென்படுகிறது என்று கூறலாம். பூனை குறுக்கே சென்றால் அபசகுணம் என்று கூறுவார்கள். அது போல பூஜை செய்யும் பொழுது இந்த விஷயங்களெல்லாம் நடைபெறும் பொழுது அபசகுணம் என்று கூறுவது உண்டு. அது என்னென்ன? என்பதைத் தான் இனி இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

பூஜை செய்யும் பொழுது நீங்கள் பாலை அடுப்பில் வைத்து இருந்தால் அது பொங்கி வழிவது அல்லது கீழே கை தவறி சிந்துவது, பால் திரிந்து போவது போன்ற விஷயங்களெல்லாம் நடைபெற்றால் உங்களுக்கு ஏதோ ஒரு ஆபத்து வர இருக்கிறது என்பதை உணர்த்துகிறாது. எனவே நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம். ஒரு விஷயத்திலிருந்து உங்களை பாதுகாக்கவே இவ்வாறு நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், இதில் பதர வேண்டிய அவசியம் இல்லை.

பூஜை செய்யும் பொழுது பூஜை சார்ந்த மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் போன்ற ஏதாவது ஒரு பொருள் கீழே சிந்தினால் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே உங்களுக்கு எச்சரிக்கிறது. இதனால் அவசரப்படாமல் இருப்பது நல்லது. பூஜை முடிந்த பின்பு ஏதோ ஒரு முக்கிய விஷயங்களில் ஈடுபடுவது அல்லது வெளியில் கிளம்புவது போன்றவை செய்தால் அதில் வெற்றி கிடைக்குமா? அல்லது ஆபத்து ஏற்படுமா? என்பதை சில சமயங்களில் ரத்த காயம் மூலம் உங்களுக்கு எடுத்துரைக்கும். எங்காவது இடித்துக் கொள்வது அல்லது ரத்தம் வருவது போன்ற நிகழ்வுகள் நடக்கும் பொழுது நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

வீட்டிற்குள் பூஜை செய்யும் பொழுது சாரை சாரையாய் சம்பந்தமே இல்லாமல் எந்த ஒரு பொருளும் கீழே சிந்தாமல் கருப்பு எறும்பு வருகிறது என்றால் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை அது உணர்த்துகிறது. எனவே நீங்கள் பூஜையில் முழுமையாக ஈடுபட வேண்டும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அது போல பூஜை முடிந்த பின்பு வெளியில் செல்லும் பொழுது நாய் கத்துவது போன்ற ஓசை கேட்பது அல்லது உங்களை பார்த்து நாய் குரைப்பது, காகம் உங்கள் தலையில் கொத்த வருவது, கழுகு சத்தமிடுவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கு மிகப்பெரிய கண்டம் வர இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதனால் வெளியிடங்களில் நீங்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.

பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகுவது பொதுவாக அபசகுணம் என்று கூறுவார்கள். அது போல நீங்கள் வீட்டில் பூஜை செய்யும் பொழுது தேங்காய் அழுகினால் அபசகுணம் தான். உங்களுடைய வேண்டுதலில் ஏதோ ஒரு பிழை இருக்கிறது என்று இது உணர்த்துகிறது. பூஜை பாத்திரங்கள் தவறுவது, திடீரென தீப்பற்றி எரிவது, ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற விஷயங்கள் நடைபெறும் பொழுதும் வேண்டுதலில் பிழை இருக்கிறது என்று அர்த்தம். எண்ணெய் சிந்துவது அல்லது எண்ணெயால் வழுக்கி விழுவது போன்றவையும் இது போல உங்களுடைய வேண்டுதலில் பிழை இருக்கிறது என்பதை குறிக்கிறது. அதாவது நீங்கள் வேண்டிய வேண்டுதலில் நேர்மை அல்லது உண்மை இல்லாமல் இருப்பது போன்றவை உணர்த்தும் சகுனங்கள் ஆகும்

பூஜை செய்யும் பொழுது யாராவது வந்து கடன் கேட்பது அபசகுணம் ஆகும். இதனால் குடும்பத்தில் வறுமை உண்டாக வாய்ப்புகள் உண்டு. இத்தகைய சகுணங்கள் நமக்கு எச்சரிக்கையை கொடுக்கிறது, வர இருக்கும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க நமக்கு இப்படி நடக்கிறது என்று நல்லபடியாக நினைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒருவரை ஏமாற்ற வேண்டும், அழிக்க வேண்டும் என்று உங்களுடைய வேண்டுதல் இருக்கக் கூடாது. நேர்மறையான வேண்டுதல்களுக்கு மட்டுமே பலன் உண்டு. எனவே எதிர்மறையான வேண்டுதல்கள் நீங்கள் வைக்கும் போது இது போன்ற அபசகுனங்கள் ஆகும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts