பிந்திய செய்திகள்

துளசிச் செடிக்கு பூஜை செய்தும் பலனில்லை என்றால் நீங்கள் இந்த தவறை செய்கிறீர்கள்!

தெய்வீக மூலிகையாக கருதப்படும் இந்த துளசிச் செடி இந்து மதத்தில் புனிதமான போற்றப்படுகிறது. விநாயகருக்கு அருகம்புல் போல மகாலட்சுமிக்கு துளசிச் செடி விசேஷமானது. ஒவ்வொரு துளசி இலைகளிலும் மகாலட்சுமி நிறைந்து காணப்படுவதாக ஐதீகம் உண்டு. இதனால் துளசிச் செடியை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டங்களுக்கு குறைவிருக்காது என்று கூறுவார்கள்.

இத்தகைய துளசிச் செடிக்கு பூஜை செய்தும் உங்களுக்குப் பலனில்லை என்றால் நீங்கள் இந்த தவறை செய்கிறீர்கள் என்று அர்த்தம்! அது என்ன? துளசிச் செடி இருக்க வேண்டிய திசை என்ன? துளசிச் செடிக்கு ஐந்து ரூபாயில் பரிகாரம் செய்து பாருங்கள், பிறகு நடப்பதெல்லாம் நன்மைக்கே!

தெய்வீக மூலிகையாக இருக்கும் இந்த துளசி செடி வீட்டில் நீங்கள் எந்த திசையில் வைத்திருக்கிறீர்கள்? என்பது மிகவும் முக்கியம். துளசி செடி வைத்திருக்க வேண்டிய திசையில் வைத்தால் தான் அதற்கு உரிய பலன்கள் நமக்கு கிடைக்கும். சுப திசைகள், அசுப திசைகள் என்று துளசி செடிக்கு உண்டு.

சுப திசைகளாகக் கருதப்படும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு ரொம்பவே விசேஷமானது .எனவே இத்தகைய திசைகளில் நீங்கள் துளசி செடியை அமைத்து முறையாக பூஜை செய்தால் வேண்டிய பலன்கள் அத்தனையும் அப்படியே கிடைக்கும். ஸ்ரீமன் நாராயணன் மற்றும் மஹாலக்ஷ்மி தாயார் அருள் கிடைக்க தினந்தோறும் துளசியை பூஜை செய்வது வேண்டும்.

திருமண தடைகள் இருப்போர், குழந்தை பாக்கிய பிரச்சினைகள் இருப்போர், கண் பார்வை குறைபாடு, பேசுவதில் பிரச்சனை என்று உடல் அங்கஹீனம் மற்றும் மன அங்கஹீனம் போக்கும் அற்புதமான ஒரு வழிபாடு துளசி வழிபாடு!

வீட்டில் தனம் மற்றும் தானியம் குறைவில்லாமல் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு வெள்ளிக்கிழமையில் துளசி வழிபாடு செய்வது உசிதமானது. இத்தகைய அருட் பெரும் பலன்களை அருளும் இந்த துளசி செடி வீட்டில் இருக்கக் கூடாத திசை என்றால் அது வடமேற்கு மற்றும் தென்கிழக்கு ஆகும்.

இந்த திசையில் துளசி செடியை வைத்து இருந்தால் உடனே அதனை மாற்றி அமைத்து விடுங்கள். துளசிச் செடியை வழிபட்டும் பலன் இல்லை என்று கூறுபவர்கள் இது போல ஏதாவது ஒரு தவறுகளை செய்திருக்கக்கூடும்.

அது மட்டுமல்லாமல் துளசி செடியில் துளிர்க்கும் விதைகளை அவ்வப்போது உருவி அந்த செடிக்கே அதனை உரமாக கொடுத்து விட வேண்டும். காடு போல துளசி செடியை ஒருபோதும் வளர்க்கக் கூடாது.

சரியான அளவில், சரியான உயரத்தில் வளர்த்து அதற்கு காம்பிலும், இலைகளிலும் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி வெள்ளிக்கிழமையில் அகல் தீபம் ஏற்றி 5 ரூபாய் நாணயத்தை கையில் வைத்து நீங்கள் எந்த ஒரு விஷயத்தை நினைத்து வழிபட்டாலும் அது உடனே நடக்கும்.

நைவேத்தியமாக கற்கண்டு வைக்கலாம். துளசிச் செடியில் குப்பைகள் எதுவும் சேர விடக் கூடாது. அதனை அவ்வப்போது அகற்றி மண் வளத்தை கைகளால் கிளறி, ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.

உயிர்ப்புள்ள இந்த துளசி செடிக்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி 5 ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொண்டு துளசி மந்திரத்தை 3 முறை உச்சரித்து உங்கள் வேண்டுதல்களை முடித்த பின்பு கையில் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தை துளசிச் செடியின் மண்ணில் புதைத்து விட வேண்டும்.

நீங்கள் வேண்டிய வேண்டுதல் நிச்சயம் விரைவாக பலித்து விடும் என்கிற நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள். வேண்டுதல் நிறைவேறிய பிறகு மீண்டும் நீங்கள் ஒரு வேண்டுதல் வைக்கும் பொழுது அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts