Home ஆன்மீகம் அடுத்தவர்களுடைய உடைகள் மற்றும் நகைகளை நாம் அணியலாமா? கூடாதா? இதைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன கூறுகிறது?

அடுத்தவர்களுடைய உடைகள் மற்றும் நகைகளை நாம் அணியலாமா? கூடாதா? இதைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன கூறுகிறது?

0
அடுத்தவர்களுடைய உடைகள் மற்றும் நகைகளை நாம் அணியலாமா? கூடாதா? இதைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன கூறுகிறது?

பொதுவாக ஒருவருடைய பொருட்களை அடுத்தவர்கள் சில சமயங்களில் அவசரத்திற்கு பயன்படுத்துவது உண்டு. எல்லோரும் பயன்படுத்தக் கூடிய பொதுவான பொருளாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் தனிப்பட்ட ஒருவருடைய பொருட்களை அடுத்தவர்கள் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் இதனால் உண்டாகக் கூடிய தோஷங்கள் என்ன? அதிலும் ஒருவருடைய வஸ்திரம் மற்றும் நகைகளை மற்றவர்கள் அணிந்து கொள்ளலாமா? கூடாதா? இதைப் பற்றி சாத்திரங்கள் என்ன கூறுகிறது?

ஒருவருடைய நகை மற்றும் வஸ்திரத்தை அதாவது உடைகளை அடுத்தவர்கள் சில சமயங்களில் அவசரத்திற்கு வாங்கி அணிவது உண்டு. அக்காவிடமிருந்து தங்கையும், தங்கையிடம் இருந்து அக்காவும் இது போல நகை மற்றும் உடைகளை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள்.

ஒரு குடும்பத்தில் நீங்கள் ரத்த சம்பந்தம் இருக்கும் பொழுது இவ்வாறு செய்வதில் தவறு இல்லை எனினும் ஒருவர் உடுத்திக் கொண்டிருக்கும் உடையை கழட்டி, இன்னொருவர் அணிவது கூடாது. அவர்களுடைய உடை துவைத்த நிலையில் இருக்கும் பொழுது அதை குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் பயன்படுத்தலாம்.

ஆனால் வெளி நபர்கள், ரத்த சம்பந்தமில்லாத உறவுகள் உங்களுடைய உடயை பயன்படுத்துவதால் உங்களுக்கு வரக் கூடிய தோஷங்கள், அவர்களையும் தொற்றிக் கொள்ளும் என்று சூட்சமமாக கூறப்படுகிறது. இதனால் பழைய துணி மணிகள் நீங்கள் தானமாக மற்றவர்களுக்குக் கொடுக்கும் பொழுது, அவர்களுக்கு தோஷங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எப்பொழுதும் பழைய துணிமணிகளை உப்பு தண்ணீரில் ஒரு முறை அலசி நன்கு காய வைத்து பிறகு தானம் கொடுக்கலாம். ;

கிழிந்த மற்றும் கறைகளுடன் கூடிய துணிமணிகளை தானம் செய்வதால் உங்களுக்கு வஸ்திர தோஷம் ஏற்படும் என்பதால் அவற்றை முற்றிலுமாக எரித்து அழித்து விடுங்கள். இவற்றை யாருக்கும் கொடுக்க கூடாது. ஒருவருடைய தங்க நகைகள் மற்றவர்கள் அணியும் பொழுதும் இதே மாதிரி தங்க தோஷம் ஏற்படுவது உண்டு. உங்கள் வியர்வை பட்ட அந்த தங்கத்திற்கு தோஷங்கள் உண்டு, எனவே அதனை மற்றவர்கள் பயன்படுத்தும் பொழுது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

அடகு கடைக்கு சென்ற நகைகளில் கூட தோஷங்கள் உண்டு எனவே அடகு கடையில் இருந்து மீட்டுக் கொண்டு வந்த நகைகளையும் இவ்வாறு செய்ய வேண்டும். கொஞ்சம் மஞ்சளை தண்ணீரில் கரைத்து அதில் கொஞ்ச நேரம் உங்களுடைய நகைகளை மூழ்கும்படி போட்டு வையுங்கள். அதன் பிறகு தண்ணீரில் அலசி, துடைத்து பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். மஞ்சள் தண்ணீர் தங்க தோஷத்தை நீக்கி விடும், இதனால் தங்கத்தால் ஏற்படக்கூடிய எந்த விதமான தோஷங்களும் உங்களை நெருங்காது.

நகை, உடை என்பது நம்முடைய அங்கங்களுடன் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டு இருக்கக் கூடிய பொருட்கள் ஆகும். இது போல அங்கங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பொருட்களை, ஒருவரிடமிருந்து இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக ஒருவருடைய காலணி மற்றும் கைக்குட்டைகளை கண்டிப்பாக இன்னொருவர் பயன்படுத்தவே கூடாது. ஆன்மீக ரீதியாக இவை தரித்திரத்தை ஏற்படுத்தும் என்றாலும், ஆரோக்கிய ரீதியாகவும் இவை நமக்கு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடியவை. எனவே கூடுமானவரை அடுத்தவர்களுடைய பொருளை பயன்படுத்தாமல் இருப்பது மட்டுமே நன்மை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here