பிந்திய செய்திகள்

10 மிளகு இருந்தால் போதும். பெண்களிடம் பேராபத்து எதுவும் வராது

பெண்கள் எப்போதுமே பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண்களுக்கு உள்ளே இருக்கும் சக்தி கூடுதலாக இருக்கும்போது அதில் எந்த பயமுமில்லை. சில சமயம் அந்த பெண்களுக்கு மனதளவில் பயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெண்களிடத்தில் பயம் வரும்போது, சக்தி கொஞ்சம் குறையும்போது அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம். என்பதைப் பற்றிய ஒரு சிறிய ஆன்மீக ரீதியான தகவல் உங்களுக்காக.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் போய் சாப்பிடலாம் என்பது அகத்திய முனிவரின் கூற்று. ஆக பகைமையும் எதிர்மறை ஆற்றலும் நம்மை நெருங்காமல், எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, கரு மூலிகைகளில் ஒன்றான இந்த கரு மிளகு போதும். நம் எல்லோர் வீட்டு சமையலறையிலும் கட்டாயம் இந்த கருமிளகு இருக்கும்.

11 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிவப்புத் துணியில் வைத்து சிறிய முடிச்சாக கட்டிக்கொள்ளுங்கள். இந்த முடிச்சு எப்போதும் பெண்களிடம் இருக்கட்டும். நீங்கள் அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தால், உங்கள் ஹேண்ட் பேகில் இந்த முடிச்சு இருக்கட்டும். உங்கள் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம், கல்லூரி செல்பவர்களாக இருந்தால் அவர்களுடைய புத்தகப் பையில் இந்த முடிச்சு இருக்கட்டும்.

நேரம் காலம் இல்லாமல் பெண்கள் வெளியில் சென்று வரும்போது கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ எதிர்மறை ஆற்றல்களின் மூலம் அவர்களுக்கு பேராபத்து இருக்கிறது. காத்து கருப்பு பிரச்சனை, கண்திருஷ்டி பிரச்சனை, இப்படிப்பட்ட பிரச்சனை எல்லாம் பெண் குழந்தைகளை தாக்காமல் இருக்க இந்த கருமிளகு பாதுகாப்பாக இருக்கும்.

இந்த மிளகு முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வருடம் ஆனாலும் சரி மிளகு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை பழைய மிளகு முடிச்சை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய மிளகை எடுத்து முடிச்சு கட்டி வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த பழைய விஷயங்களை எல்லாம் மூடநம்பிக்கை என்று ஒதுக்கி வைப்பதன் மூலமாகத்தான் இன்று நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை பெண்கள் செய்தால் நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய நிறைய சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். cash

இதே போல 11 மிளகை பச்சை நிறத் துணியில் கட்டி, வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். நீங்கள் பணம் வைக்கும் பர்ஸில் இந்த முடிச்சை வைத்தாலும், அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் இருக்காது. பணம் வீண் விரையம் ஆகாது. பணவரவு அதிகரிக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தையும் செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts