பிந்திய செய்திகள்

கண் திருஷ்டி அகல இந்த கற்பூர பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

“கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. அதாவது கல்லினால் காயம் ஏற்பட்டாலும் அந்த வலி கண்ணுக்குத் தெரியும். அதனை மருந்து போட்டு ஆற்றிவிட முடியும். ஆனால் கண்ணடி என்பது மற்றவர்கள் நம்மை வியப்புடன் பார்ப்பதாகும். இதனால் உண்டாகும் பொறாமை அதிர்வலைகள் நம்மை சூழ்ந்து கொள்வதால் நமக்கு நோய் ஏற்படும்.

உடல் அசதி உண்டாகும், வீட்டில் பிரச்சனை ஏற்படும், மகிழ்ச்சி குறையும், சண்டைகள் உண்டாகும், வியாபாரத்தில் பிரச்சனை ஏற்படும். இவ்வாறு பலவிதமான பாதிப்புகளை கொடுக்கக்கூடியது இந்த கண் திருஷ்டி. எனவே தான் இவ்வாறான பழமொழி கூறப்படுகிறது. ஒரு சிலர் இவற்றில் நம்பிக்கை இல்லை என்றும் கூறலாம்.

ஆனால் இன்று வரையிலும் பலரும் மசூதிகளுக்குச் சென்று மந்திரித்து வருவது, கோவிலுக்குச் சென்ற மந்திரிப்பது போன்றவற்றை செய்து தான் வருகின்றோம். நம்பிக்கை வைத்து எதை செய்தாலும் அதில் இருந்து உடனே நம்மால் விடுபட முடியும். அவ்வாறு கண் திருஷ்டியில் இருந்து விடுபட வீட்டில் எளிமையாக செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாமென்ன வைத்திருக்கிறோம் மற்றவர் நம்மை பார்த்து கண் வைப்பதற்கு என்று பலரும் யோசித்திருப்போம். கார் வாங்குவது, வீடு வாங்குவது, நகை வாங்குவது இவ்வாறான செயல்களை பார்த்து மட்டும் மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. நீங்கள் ஒரு நல்ல ஆடை உடுத்தி சென்றாலும் உங்களைப் பார்த்து சிலர் பெரு மூச்சு விடுவார்கள்.

இந்த ஒரு பெருமூச்சு போதும் உங்களை துன்பத்தில் வீழ்த்துவதற்கு. இன்றைய காலம் நவீன காலம் ஆகி விட்டது. இப்பொழுதெல்லாம் ஆடை உடுத்தி செல்வது அனைவரின் தனிப்பட்ட உரிமையாகும். எனவே சமூகத்தில் மதிப்புடன் இருக்க பணம் படைத்தவர்கள், பணம் இல்லாதவர்கள் அனைவருமே நல்ல ஆடை உடுத்தி தான் செல்கின்றோம்.

ஒரு நல்ல ஆடை உடுத்தி செல்வதற்கு கண்திருஷ்டி என்றால் நீங்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் சென்றால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். இவ்வாறு தீய எண்ணங்கள் கொண்டவர்கள் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களின் தீய பார்வையில் இருந்து விடுபட அடுப்பு எரித்தஉடன் அதில் இருக்கும் கறித் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பசு மாட்டு கோமியம் மற்றும் பன்னீர் சேர்த்து அதில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கரித்துண்டு ஒரு நாள் முழுவதும் கோமியத்தில் ஊறியவுடன், அதனை வெளியே எடுத்து, நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பொடியுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சை கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து, ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கற்பூரத்தை சேர்த்து நன்றாக கலந்து கற்பூர கட்டிகளை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கற்பூர கட்டிகளை பூஜை அறையின் முன் வைத்து, உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்து, கற்பூர ஆராதனை செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு முறையும் திருஷ்டி சுற்றி போடும் பொழுது இந்த கற்பூரத்தில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து அதனை தலை முதல் கால் வரை வைத்து தடவி சுற்றி போட்டு, வெளியில் வைத்து எரித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வளவு பெரிய கண் திருஷ்டியாக இருந்தாலும் அதில் இருந்து எளிதாக விடுபட முடியும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts